கோவிட்-19 பரவல் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா காரணமாக நாட்டில் இரண்டு லட்சம் பேர் உயிரிழந்தது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.
கரோனா காரணமாக இரண்டு லட்சம் அமெரிக்கர்கள் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், "இது ஒரு வெட்கக்கேடானது. ஆனால், எங்கள் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்காவிட்டால் உயிரிழப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கக்கூடும்.
முறையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்காவிட்டால் சுமார் 25 லட்சம் அமெரிக்கர்கள் கரோனா காரணமாக உயிரிழந்திருப்பார்கள்" என்றார்.
மேலும், பொருளாதார ரீதியாக அமெரிக்கா நல்ல நிலையில் உள்ளது என்றும் பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தையே சந்தித்துவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் இதுவரை 70 லட்சத்து 97 ஆயிரத்து937 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஐநா ஊழியர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பு மருந்து'- ரஷ்யா அறிவிப்பு