அமெரிக்காவின் சிகாகோவின் பிரபல வரத்தகக் கட்டடத்தில் பொது மக்கள் ஏராளமானோர் திடீரென கூடியிருந்தனர். அங்கு பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் துப்பாக்கி வைத்திருந்த நபரை காவல் துறையினர் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், காவல் துறையினரைத் கடுமையாக தாக்கத் தொடங்கினர்.
சிறிது நேரத்தில் வர்த்தகக் கட்டடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. பொது மக்களும், காவல் துறையினரும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டனர். இதுதான் சரியான நேரம் என பலர் கடைகளை சூறையாடி திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர். எனவே, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் காவல் துறையினர் களமிறங்கினர்.
திடீர் மோதல் சம்பவத்தில் இரண்டு நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. தற்போது, இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வன்முறையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த மோதல் சம்பவத்தில் 13 காவலர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது, 2 மாதங்களுக்கு முன்பு காவலரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் மரணமே காரணம் எனக்கூறப்படுகிறது.