ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் (16). இவர், பருவநிலை மாற்றத்தை தடுப்பது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்தாண்டு அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், பள்ளிப் படிப்பை சுமார் ஓராண்டு நிறுத்திவிட்டு, பல்வேறு நாடுகளுக்கு பயணித்து மாணவர்களுடன் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்த போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்.
அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வந்துள்ள கிரெட்டாவுக்கு, பொதுமன்னிப்பு சபையின் உயரிய விருதான 'மனசாட்சிக்கான தூதர்' (Ambassador of Conscience) விருதை அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஐநாவில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள முதல் இளைஞர் பருவநிலை உச்சி மாநாட்டில் கிரெட்டா கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
புவியின் மீது கொண்ட காதல் - பள்ளிப் படிப்பைத் துறந்த 16 வயது சிறுமி!