மெக்ஸிகோவின் வெரகுருஸ் மாகாணத்தின் மினாடிட்லன் நகரில் குடும்ப விழா ஒன்று நடைபெற்றது. அப்போது, விழாவில் திடீரென புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையிலிருந்த நான்கு பேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வெராகுருஸ் ஆளுநர், உயர் அலுவலர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, இந்தத் தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், அடையாளம் தெரியாத நபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.