ETV Bharat / international

‘பிரபலமான நான்கு வீடியோக்களில் ஒன்று மக்களுக்கு தவறான தகவல்களைக் கொடுத்துள்ளன!’ - COVID-19 videos in English mislead viewers

கரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவல்கள் அளிக்கும் வீடியோக்களே யூ-டியூப்பில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்டவையாக இருக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

1-in-4-popular-youtube-covid-19-videos-in-english-mislead-viewers

author img

By

Published : May 15, 2020, 6:08 PM IST

கரோனா வைரசிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன, ஆனால் அதனை மருந்து நிறுவனங்கள் விற்க மறுத்து வருகின்றன, சில நாடுகளில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளன, கரோனா வைரஸ் வைத்து இனவெறி தூண்டுவது, பாகுபாடு காட்டப்படுவது என மக்களை திசைதிருப்பும் வகையிலான, தவறான தகவல்களை வழங்கும் பல்வேறு வீடியோக்கள் யூ-ட்யூப் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மார்ச் 15ஆம் தேதி கூகுள் நிறுவனத்தின் சீஈஓ சுந்தர் பிச்சை, “கோவிட்-19 தொடர்பாக தவறான தகவல்களைக் கொண்டுள்ள வீடியோக்களை யூ-ட்யூப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரசைத் தவிர்க்க யாராலும் நிரூபிக்கப்படாத முறைகள் அடங்கிய வீடியோக்கள் நீக்கப்படும்'' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யூ-டியூப் வீடியோக்களைப் பற்றி கனடாவில் மருத்துவம் படிக்கும் மாணவர் ஹெய்டி-ஓய்-ஈ தன் நண்பர்களுடன் இரு ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஆய்வு முடிவுகள் கனடாவைச் சேர்ந்த பிஎம்ஜே குளோபல் ஹெல்த் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆராய்ச்சியில் 69 வீடியோக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவையனைத்தும் 25 கோடிக்கும் வேல் பார்வையாளர்களைக் கொண்ட வீடியோக்களாகும்.

அந்த 69 வீடியோக்களில் 50 வீடியோக்கள் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வீடியோக்கள் எனக் கூறப்பட்டுள்ளன. நான்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களில் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. மொத்தமாக 19 வீடியோக்கள் தவறான தகவல்களை மக்களுக்கு கொடுத்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சரியான தகவல்களைக் கொடுக்கும் அரசு மற்றும் வல்லுநர்கள் சார்ந்த வீடியோக்கள் மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள், “இதுபோன்ற வீடியோக்களை மக்களால் அதிகம் பார்க்கப்படுவது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுத்தும். தவறான தகவல்களைக் கொண்டுள்ள வீடியோக்களை மக்கள் பார்க்கும்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும்'' என்றனர்.

இதையும் படிங்க: 'விஞ்ஞானத்தில் மிஞ்சிய மனிதகுலம்... வைரஸைக் கையாள திணறுகிறது’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.