பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்த ஆப்ரிக்கா நாடான ஜிம்பாப்வேக்கு சுதந்திரம் பெற்றுத்தந்து, அந்நாட்டின் அதிபராக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தவர் ராபர்ட் முகாபே.
கடந்த 6ஆம் தேதி உடல் நலக்கோளாறு காரணமாக முகாபே தன் 95ஆவது வயதில் காலமானார்.
இதையும் படிங்க: ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் 95 வயதில் காலமானார்
இதையடுத்து, அவரின் உடலை ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள தேசிய வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இதற்கு முகாபேவின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.
பின்னர் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முகாபேவின் உடல் அவரது சொந்த ஊரான குட்டாமாவில் ( ஜிவிம்பா மாவட்டம்) அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
தற்போதைய ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் நங்காக்வா, மூத்த அரசு அலுவலர்கள், முகாபேவின் மனைவி கிரேஸ் மற்றும் குடும்பத்தினர் இதில் கலந்துகொண்டனர்.