உலகில் அரிய விலங்குகளில் ஒன்றாக வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் கருதப்படுகிறது. இவற்றின் தனித்துவமான வெள்ளை தோல்கள் காரணமாக வேட்டைகாரர்களின் முதல் இலக்காக இவை உள்ளன. இதனால் அழியும் விளிம்பிற்கு வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் தள்ளப்பட்டன.
உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச்சிவிங்கி கென்யாவில் உள்ளது. வேட்டையாடுபவர்களிடமிருந்து வெள்ளை ஒட்டகச்சிவிங்கியைப் பாதுகாக்கும் வகையில் ஜிபிஎஸ் ட்ராக்கர் சாதனம் அதில் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம்தான் இந்த வெள்ளை பெண் ஒட்டகச்சிவிங்கியின் கன்று வேட்டைகாரர்களால் கொல்லப்பட்டது. லூசிசம் என்று அழைக்கப்படும் ஒரு அரிய மரபணு கோளாறு காரணமாகவே ஒட்டகச்சிவிங்கி வெள்ளை நிறத்தில் உள்ளது.
இந்தக் கடைசி வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டைக்காரர்கள் குறிவைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே தற்போது ஜிபிஎஸ் ட்ராக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வனவிலங்கு ரேஞ்சர்களால் வெள்ளை ஒட்டகச்சிவிங்கின் இருப்பிடத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்காணிக்க முடியும். இதற்கு கன்சர்வேன்சி நன்றி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "கரோனா தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிக்கிறது" - ஃபைஸர் நிறுவனம்