கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. முன்னதாக, நோய் ஏற்படுத்தும் விளைவுகளால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஐநா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பெரும் பொருளாதார வீழ்ச்சியை விட கரோனா மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பெருந்தொற்றால் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது. ஏழை நாடுகள் மட்டுமல்லாமல் வளரும் நாடுகளும் அதிக கடன்களை வாங்கியுள்ளது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
உலக மக்கள் தொகையில் 75 விழுக்காடு மக்கள் வாழும் நடுத்தர வருமான நாடுகள் கடன் சுமையில் சிக்கும். இந்த நாடுகளில்தான் 62 விழுக்காடு ஏழை மக்கள் வாழ்கின்றனர். 2020ஆம் ஆண்டின் இறுதியில், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும். 1930 களில் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சியை விட கரோனா மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த பேரிடர் காலத்தில் ஆப்ரிக்க நாடுகள் ஒற்றுமையை பறைசாற்றியுள்ளது. காலநிலை மாற்றத்தாலும் கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தாலும் ஆப்ரிக்க நாடுகள் பெரிய அளவில் பாதிப்படையும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: தென்னாப்பிரிக்காவில் முக்கிய கட்சிகளிடையே கருத்து மோதல்