தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக் நாட்டில் கடந்த ஒரு வாரமாக கென்னத் புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கின.
இந்நிலையில், இந்த கென்னத் புயலில் சிக்கி 38 பேர் பலியாகியுள்ளதாக மொசாம்பிக் அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வானிலை மையம் கூறுகையில், "கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. 500 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பொழியும், இதன் மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்" என குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளை சின்னாபின்னமாக்கிய இடாய் புயலால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.