சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீரை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக கடந்த 11ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால், அவருக்கு எதிராக போராடிய மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். எனினும், ராணுவ புரட்சியை விரும்பாத அந்நாட்டு மக்கள் தலைநகர் கார்டூமில் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இத்தகைய சூழலால் மீண்டும் நெருக்கடி அதிகரித்தது.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சரும், ராணுவ கவுன்சிலின் தலைவருமான அவத் இபின் ஆஃப் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ராணுவ கவுன்சில் தலைமை பொறுப்பில் இருக்கும் நான், இந்த பதவியிலிருந்து விலகுகிறேன். நாட்டின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் " என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.