ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு நகரமான கோமாவில் 17 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் வடக்கு கிவு மாகாணத்தில் கோமாவின் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு வீடுகளில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்துக்குள் இருந்த பயணிகள் 17 பேரும் உயிரிழந்துவிட்டனர். இந்த தகவல் கிவு மாகாண ஆளுநர் மாளிகை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. அதே மாகாணத்தில் கோமாவுக்கு வடக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நிறுவனத்துக்குச் சொந்தமானது.
காங்கோவில் விமான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. மோசமான பராமரிப்பு மற்றும் விமான பாதுகாப்பு குறைபாடு இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நிம்மதியில்லாத நெடுஞ்சாலை பயணம்.!