எத்தியோப்பியா நாட்டில் அரசுக்கு எதிரான கலவரத்தில் இதுவரை போராட்டக்காரர்கள் 86 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. வியாழக்கிழமை அன்று (அக்., 31) உள்ளூர் செய்தி ஊடகங்கள் எத்தியோப்பியாவில் 78 பேராட்டக்காரர்கள் உயிரிழந்ததாகவும் அமைதியற்ற சூழல் நிலவுவதால் 400-க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தன.
எத்தியோப்பியாவில் கடந்த வாரம் அகமதுவுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கி அது வன்முறையாக மாறியது. சமூக செயற்பாட்டாளர் ஜவார் முகமதுவின் ஃபேஸ்புக் பதிவுக்கு பின்னர்தான் தலைநகரான அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவின் ஒரோமியா ஆகிய இடங்களில் கலவரங்கள் வெடித்தன.
ஜவார் முகமதுவின் பதிவில், தனக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இருந்தது. ஆனால் இதனை அப்போது காவல் துறை உயர் அலுவலர்கள் மறுத்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.