மொரோகோ: பென்ஸ்லிமேன் தோட்டத்தில் உள்ள வீடு காண்போர் மனதை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்,மரம்,கற்கள்,வைக்கோல், பிரம்பு உள்ளிட்டவைகளைக் கொண்டு கட்டப்பட்ட இவ்வீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பாரம்பரியமும் நிறைந்தது.
2016ஆம் ஆண்டு யூனெஸ் உவரி எனும் கட்டட கலைஞரால் எகோடோம் மொராக் எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பாரம்பரியமும் நிறைந்த வீட்டை அமைத்துத் தருவதே இதன் நோக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இதுபோன்ற வீட்டை அதிகளவில் அமைத்துத் தருகிறது.
இந்த வீட்டை அமைப்பதற்கான மூலப் பொருட்கள் பெரும்பாலும் உள்ளூரில் இருந்தே பெறப்படுகின்றன. இதனால் வீட்டை அமைப்பதற்கான செலவு குறைவு. மொரோகோவில் இதுபோன்ற வீடுகளை அமைத்ததன் மூலம், பசுமை இல்ல வாயுக்களின் தாக்கம் குறைந்துள்ளது என கூறப்படுகிறது.