அன்டனானரிவோ: மடகாஸ்கர் நாட்டின் மனநராவில் இருந்து இன்று ஃபிரான்சியா என்னும் சரக்குக் கப்பல் இவோங்கோ துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது. ஆனால் செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால், அருகில் உள்ள துறைமுகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடற்படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கப்பல் 60 விழுக்காடு நீருக்குள் மூழ்கியதால்,
19 பேர் உயிரிழந்தனர். 66 மாயமாகினர். 45 பேர் மீட்கப்பட்டனர். முதல்கட்ட தகவலில், இந்த சரக்கு கப்பலில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் சட்ட விரோதமாக ஏற்றிவந்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தரை தட்டிய பார்ஜ் கப்பல்: விசைப்படகுகள் மூலம் மீட்பு