எத்தியோப்பிய நாட்டின் பிரதமராக இருப்பவர், அபி அஹமது அலி. எத்தியோப்பியா - எரித்தியா நாடுகளுக்கு இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைப் பிரச்னை நிலவி வந்தது. இந்த பிரச்னையை அமைதியான முறையில் முடித்து வைத்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் மொத்தம் 301 பேர் இருந்தனர். இந்த நிலையில் அபி அஹமதுவுக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது. எத்தியோப்பிய நாட்டில் இவர் ஏற்படுத்திய சீர்திருத்தம் காரணமாக பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதன் மூலம் இரு நாடுகளும் சுமூகமான முறையில் எல்லைப் பிரச்னையை தீர்த்துக் கொண்டனர்.
சென்ற 2009ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல், மற்றொரு அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டா் (2002), பாகிஸ்தானைச் சேர்ந்த கல்வி ஆர்வலர் மலாலா (2014), ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அனான்(2001) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அன்னை தெரசா (1979) ஆகியோரும் பல்வேறு கால கட்டங்களில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.
இதையும் படிங்க:
Noble Price 2019: இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள்