ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் 2018ஆம் ஆண்டு அறியப்பட்டது. இந்த கொள்ளை வைரஸ் தொற்றுநோயிக்கு அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் 2,243 மக்கள் உயிர் இழந்தனர்.
இந்த நிலையில் உலக நாடுகளின் பெரும் முயற்சி காரணமாக இந்த வைரஸ் அங்கேயே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் காங்கோவில் எபோலா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளதை அந்நாட்டின் சுகாதார அலுவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனை உலக சுகாதார நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் நோயான கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் எபோலா வைரஸூம் காங்கோவை அச்சுறுத்துவதால் நிலைமை சிக்கலாக உள்ளது.
தற்போது வரை காங்கோவில் கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பாளர்கள் 611 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். உயிரிப்பு 20 ஆக உள்ளது. மற்ற ஆப்பிரிக்க நாடுகளை போன்றே காங்கோவும் கோவிட்-19 சோதனையை குறைவாக நடத்தியுள்ளது. இதனால் உண்மையான பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.
இதையும் படிங்க: எபோலா வைரஸ் எதிரொலி: சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம்