ETV Bharat / international

பர்கினா ஃபசோவில் தேவாலயம் முன்பு துப்பாக்கிச் சூடு - 6 பேர் பலி! - attack

குவாகதகோ: ஆப்பிரிக்கா நாடான பர்கினா ஃபசோவில் தேவாலயம் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி
author img

By

Published : Apr 30, 2019, 11:15 AM IST

மேற்கு ஆப்பிரிக்காவில் கனடாவிற்கு அருகில் பர்கினா ஃபசோ அமைந்துள்ளது. இந்நிலையில், சோயும் மாகாண தலைநகர் டிஜிபோவில், தேவாலயம் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

உள்ளூர் நேரப்படி சரியாக 12 மணிக்கு, ஞாயிறு பிரார்த்தனை முடிந்து அனைவரும் தேவாலயத்தை விட்டு வெளியேறிய தருணத்தில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தொியாத நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போதகர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த சில வருடங்களாக பர்கினா ஃபசோவில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது. இந்நிலையில், அல் குவைதா, அன்சாருல் இஸ்லாம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் நாட்டில் உலவுவதாக அந்நாட்டு உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று சரியாக ஒரு வார காலத்தில் பர்கினா ஃபசோவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும், இரு நாடுகளிலும் தாக்குதல் சம்பவம் ஞாயிற்றுக்கிழமைகளில் அரங்கேறி இருப்பது கவனிக்கத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.