நியாமி (நைஜர்): மேற்கு தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடு நைஜர். இந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, போகோ ஹராம் கிராமம். இந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ளது, டூமர் சந்தை. இங்கு டிச.12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஜிகாதி குழுவினரால் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் வீடுகள் மற்றும் சந்தைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது சந்தையிலிருந்து தப்ப முயன்ற நபர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்ட ஆளுநர், நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அவர்களது வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அருகிலுள்ள கிராமங்களில் மறைந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அண்டை நாடான நைஜீரியா 72 மணிநேர துக்கத்தை அறிவித்துள்ளது. டூமர் நைஜீரிய நாட்டின் எல்லையில் அமைந்துள்ளதால் அந்நாடு துக்கத்தை அனுசரித்துள்ளது. தீ வைப்பிலிருந்தும், துப்பாக்கிச் சூட்டிலிருந்தும் தங்களை காத்துக் கொள்ள எண்ணிய மக்கள் ஆற்றில் குதித்து இறந்துள்ளதாக நைஜர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 28 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: சுட்டு வீழ்த்தப்பட்ட 15 தாலிபான்கள்!