ETV Bharat / international

பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு: பேருந்தில் இருந்த 34 பேர் உயிரிழந்த பரிதாபம்!

பேருந்தை வழிமறித்த பயங்கரவாதி, மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பயணிகளை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Nov 16, 2020, 7:41 AM IST

34 killed in terror attack, terror attack on bus in Ethiopia,  Addis Ababa, Benishangul Gumuz region, பயங்கரவாதிகள் தாக்குதல், ethiopia terror attack, 34 பேர் சுட்டுக்கொலை, எத்தியோப்பியா துப்பாக்கிச் சூடு, எத்தியோப்பியா பயங்கரவாதி தாக்குதல்
எத்தியோப்பியா துப்பாக்கிச் சூடு

அட்டிஸ் அபாபா (எத்தியோப்பியா): பேருந்து பயணிகள் மீது துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதி தாக்குதல் நடத்தியதில் 34 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

எத்தியோப்பியாவில் டைக்ரே மாகாணத்தில் உள்ள கிளர்ச்சி படையினருக்கும், அரசுப்படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நீடித்துவருகிறது. இந்த மோதலில் டைக்ரே மாகாண படையினர் பலர் உயிரிழந்து வருகின்றனர். அதேவேளையில் அரசுப் படையினரும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால், உள்நாட்டு போர் மிக தீவிரமடைந்து வருகிறது. இச்சூழலில், அந்நாட்டின் பனிஷாங்குல் - குமுஸ் மாகாணத்தில் மிடகேல் பகுதியில் பேருந்து ஒன்றில், நேற்றிரவு (நவ. 15) 35க்கும் அதிகமான பயணிகள் பயணித்தனர்.

அப்போது, அந்த பேருந்தை வழிமறித்த பயங்கரவாதி, மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பயணிகளை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். சற்றும் எதிர்பார்க்காத இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பயணிகள், தப்பிச்செல்ல முயற்சித்தனர்.

ஆனாலும், இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர் யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் டைக்ரே மாகாணத்தைச் சேர்ந்த யாரேனும் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.