லாஸ் ஏஞ்சலிஸ்: எஃப்பிஐ-ஆல் உளவு வளையத்துக்குள் சிக்கி மனரீதியான டார்ச்சரை அனுபவிக்கும் கேரக்டரில் கிறிஸ்டன் ஸ்டீவர்ட் நடித்துள்ள செபர்க் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1950களில் பிரபல நடிகையாகத் திகழ்ந்தவர் ஜீன் செபர்க். சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரது பிரான்ஸ் மொழிப்படமான பிரீத்லெஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு புதிய அலையை ஏற்படுத்திய நடிகை என்று கெளரவம் வழங்கப்பட்டது.
நடிகையாக இருந்தாலும் சமூக அக்கறை கொண்ட இவர் கருப்பின மக்களுக்காகக் குரல் கொடுத்தார். ஃபாசிசம், இனவெறிக்கு எதிராகவும் மார்க்சிய கொள்கை பேசிய தி பிளாக் பேண்தர் (பிபிபி - கருஞ்சிறுத்தை) கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டார். அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்தக் கட்சி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக குரல் கொடுத்தது.
இதையடுத்து இந்த கட்சியினருடன் இணைந்து சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த செபர்கை, எஃப்பிஐ-யினர் தங்களது உளவு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அவரது நடவடிக்கைகளை கண்காணிப்பது, தொலைபேசி உரையாடல்களை டேப் செய்வது என்று பல வகைகளில் மனரீதியாக அவர் டார்ச்சரை அனுபவித்தார்.
ஜீன் செபர்கின் பொது வாழ்க்கை ஈடுபாடு, காதல் வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செபர்க் என்று ஹாலிவுட் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கிறிஸ்டன் ஸ்டீவர்ட் செபர்க் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்துக்கு செபர்க் போன்ற தோற்றத்தைப்பெற தனது ஹேர்ஸ்டைலை கட்டிங் செய்து மாற்றியுள்ளார்.
எஃப்பிஐ-யின் உளவு வேலையால் செபர்க் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 1960களின் பின்னணியில் படத்தின் கதை அமைந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் அமெரிக்காவிலும், ஜனவரி மாதம் பிரிட்டனிலும் ரிலீஸாகவுள்ளது.