ETV Bharat / headlines

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - வருவாய்த் துறை அமைச்சர்

author img

By

Published : Jul 3, 2021, 2:33 AM IST

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரன்

சென்னை: தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுடன் பட்டா வழங்குதல் தொடர்பாக முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது. விரைந்து பட்டா வழங்கப்பட வேண்டும் மற்றும் போலி பட்டா வழங்கப்பட்டிருந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பட்டாக்களில் தவறு இருக்குமேயானால் காலதாமதமின்றி மாற்றி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்கள்:

இந்த நான்கு மாவட்டங்களில் அரசு நிலங்கள், சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதன்மீது நடவடிக்கை எடுத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களின் தேவை இருக்கிறது, ஆகவே இந்த மாவட்டத்திலுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற துறைகள் சார்ந்த ஆக்கிரமிப்பு நிலங்களை கையக்கப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு இடங்களில் உள்ள குத்தகைதாரர்கள் பல பேர் பணம் கட்டவில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களுக்கு 15 நாள்கள் நோட்டீஸ் கொடுத்து, பணத்தை கட்ட வைக்கவும். மறுக்கும் பட்சத்தில் குத்தகையை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பை காலி செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பேப்பரில் உள்ள பழைய நடைமுறைகளை மாற்றி, பட்டா விரைவாக கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்தையும் கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

பட்டா எளிமையாக கணினி முறையில் பதிவு பெற்று விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெரும்பாலான மனுக்கள் வருவாய்த் துறைக்குதான் வந்துள்ளது. குறிப்பாக முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் உதவி தொகைம் திருநங்கைகளுக்கு உதவித்தொகை, உழவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அதிகம் வந்துள்ளன.

தயவு தாட்சண்யம் பார்க்காமல் போலி பட்டாக்களை கண்டறிந்து, நோட்டீஸ் கொடுத்து முறையாக அந்த நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.

முதியோர் பென்சன் அதிகரிப்பு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் கூட இருக்கலாம், இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார்.

ஒவ்வொரு வாரமும் RDO அந்தந்த பகுதிகளில் உள்ள பட்டாவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொடுக்க அறிவுறுத்தபட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கே குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை கட்ட அரசு அனுமதி வழங்கும் திட்டம் உள்ளது.

அரசு நிலங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் சட்டத்திற்குட்பட்டு முதலமைச்சரிடம் கலந்து பேசி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.