ETV Bharat / headlines

Share Market: விறுவிறுப்பான வியாழன்... முன்னேற்றம் கண்ட பங்குச்சந்தைகள் - விறுவிறுப்பான வியாழன்

பணவீக்கம் எதிர்பார்த்த அளவில்தான் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதால் நல்ல முன்னேற்றம் கண்டன, பங்குச் சந்தைகள்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
author img

By

Published : Feb 10, 2022, 9:31 PM IST

ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கைக் கூட்டம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இது பட்ஜெட்டுக்குப் பிறகு நடத்தப்படும் முதல் கூட்டம் என்பதால் முதலீட்டாளர்கள் வர்த்தகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், சர்வதேச அளவில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்திவருவதாலும் ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி நாணய வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டாம் என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும்; பணவீக்கம் எதிர்பார்த்த அளவில்தான் இருக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதால் பற்றிக்கொண்டன, பங்குச்சந்தைகள்.

விறுவிறுப்பான வியாழன்

வங்கிகளுக்குக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ ரேட் விகிதம் 4 விழுக்காடாக தொடரும் என்றதுடன் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 விழுக்காடாகவே தொடரும் என்றதும் ஜிடிபி விகிதம் 7.8 விழுக்காடாக இருக்கிறது எனக்கூறியது.

2021-22 நிதி ஆண்டுக்கான பணவீக்கம் 5.3 விழுக்காடாக உள்ள நிலையில், 2022-23 நிதி ஆண்டில் நுகர்வோர் பணவீக்கத்தை 4.5 விழுக்காட்டுக்குள் வைக்க இலக்கு வைத்துள்ளதாக அறிவித்தது 10ஆவது முறையாக, அதாவது 20 மாதங்களாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது என்ற செய்தி காதில் தேனாய் வந்துபாய சந்தைகளுக்கு ஊக்கம் தருவதாக அமைந்தது.

பற்றிக்கொண்டன பங்குச்சந்தைகள்

அதானி வில்மர் இன்றும் அப்பர் சர்க்யூட் லிமிட்டில் வர்த்தகமானது. LIC பங்குவெளியீட்டில் பாலிசிதாரர்களுக்கு குறைந்தவிலையில் பங்குகள் கொடுக்கப்படும் என்ற தகவல் ஆகியவற்றால் சந்தைகள் உயர்வை தொட்டதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இறுதியாக சென்செக்ஸ் 460 புள்ளிகளும் நிஃப்டி 142 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், இன்போசிஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, எஸ்.பி.ஐ லைப் இன்சூரன்ஸ் ஆகியவை உயர்வைத் தந்தன.

இதையும் படிங்க: யூ-ட்யூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து - உயர் நீதிமன்றக்கிளை அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.