இந்தியாவில் கோவிட் பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு ஆரோக்கிய சேது, கோவின் போன்ற செயலிகளை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கோவின் செயலியில் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஆனால் நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் செயலியில் பதிவு செய்தாலும் தடுப்பூசி சிதைத்துக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆரோக்கிய சேது, கோவின் போன்ற செயலிகள் கரோனாவை கட்டுப்படுத்தாது. தடுப்பூசிதான் பெருந்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும்” என பதிவிட்டுள்ளார்.