தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா மிக எளிமையாக நடக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையை, கரோனா தொற்று பாதிப்பு மிக தீவிரமாக தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. ஆதலால் பதவியேற்பு விழாவில் எத்தனை பேரை அழைக்கலாம், யார் யாருக்கெல்லாம் அழைப்பு கொடுக்க வேண்டும்? கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பதவியேற்பு விழாவிற்கு என்னென்ன என்பது குறித்து தலைமை செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், ஆளுநரின் செயலர் - ஆனந்தராவ் பட்டேல், சட்டப்பேரவை செயலர் சீனிவாசன், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மற்றொரு புறத்தில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.