அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 6:20க்கு, சிறியரக விமானத்தில் ஓஹியோ செல்ல இரண்டு பெண் உட்பட மூன்று பேர் பயணித்தனர்.
இந்த விமானம் வில்லோ க்ரோவ் என்ற பகுதியில் பறந்து கொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த சம்பவ இடம் விரைந்த அப்பர் மோர்லேண்ட் காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இது தொடர்பாக காவல்துறைத் தலைவர் மைக்கேல் மர்பி கூறுகையில்,
கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழும்போது பலமரங்களில் மோதியது. இந்த விபத்தில் பயணம் செய்த மூவரும் உடல் நசுங்கி பலியாயினர்.
மேலும், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விமானம் விழுந்ததால் தரையில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, என்றார்.