இசையென்பது தொழில்நுட்பம் அல்ல.. அதுவொரு நுட்பம்.. இசைஞானியின் விளக்கம்..
<p>தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிப்.25 மற்றும் 26ஆம் தேதிகளில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை ஹைதராபாத் டாக்கீஸ் வழங்குகிறது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் இன்று (பிப். 14) நடந்தது. </p><p>அப்போது பேசிய இசைஞானி இளையராஜா, "குழந்தைகளுக்கு பிடித்த உணவை அம்மா, சமைத்து முதலில் அவரே ருசி பார்ப்பார். அதன்பின் குழந்தைகளுக்கு வழங்குவார். ஆனால், அந்த உணவு மொத்தமும் குழந்தைகளுக்காக மட்டுமே. அதைப் போலத்தான் எனது பாடல்களை நான் முதலில் கேட்பேன். அதன்பின் உங்களுக்கு வழங்குவேன். </p><p>இந்த பாடல்கள் அனைத்தும் உங்களுக்காகத்தான். கலையென்பதும், இசையென்பதும் தொழில்நுட்பம் அல்ல. அதுவொரு நுட்பம். வரும் 25ஆம் தேதி மீண்டும் ஹைதராபாத் வருகிறேன்" எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகி சுனிதா, தெலுங்கானா தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிப்.25 மற்றும் 26ஆம் தேதிகளில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை ஹைதராபாத் டாக்கீஸ் வழங்குகிறது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் இன்று (பிப். 14) நடந்தது.
அப்போது பேசிய இசைஞானி இளையராஜா, "குழந்தைகளுக்கு பிடித்த உணவை அம்மா, சமைத்து முதலில் அவரே ருசி பார்ப்பார். அதன்பின் குழந்தைகளுக்கு வழங்குவார். ஆனால், அந்த உணவு மொத்தமும் குழந்தைகளுக்காக மட்டுமே. அதைப் போலத்தான் எனது பாடல்களை நான் முதலில் கேட்பேன். அதன்பின் உங்களுக்கு வழங்குவேன்.
இந்த பாடல்கள் அனைத்தும் உங்களுக்காகத்தான். கலையென்பதும், இசையென்பதும் தொழில்நுட்பம் அல்ல. அதுவொரு நுட்பம். வரும் 25ஆம் தேதி மீண்டும் ஹைதராபாத் வருகிறேன்" எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகி சுனிதா, தெலுங்கானா தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.