ETV Bharat / entertainment

கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களால் மறக்க முடியாத ஆண்டாக 1984 அமைந்தது ஏன்? - RIPCAPTAIN

Captain Vijayakanth: தமிழ் திரையுலகில் எண்ணற்ற சாதனைகளை புரிந்து அனைவரின் மனங்களில் நீங்க இடம் பிடித்த நடிகர் விஜயகாந்த் ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்துள்ளார்.

vijayakanth acted 18 movies in same year
ஓரே வருடத்தில் 18 படங்களை நடித்த விஜயகாந்த்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 6:31 PM IST

சென்னை: தமிழ் திரையுலகில் பல சோதனைகளைக் கண்டு சாதனை புரிந்த மனிதர்களில் ஒருவர், நடிகர் விஜயகாந்த். கலை மீது கொண்ட பற்றாலும், உதவும் குணத்தாலும் அனைவராலும் போற்றப்பட்ட மனிதர், உடல் நலக்குறைவால் அவரது 71 வயதில் நேற்று காலமானார். அவர் மறைந்தாலும், அவர் செய்த தொண்டுகள் என்றும் நிலைத்திருப்பதற்கு உதாரணமாக, அவரின் இறுதி ஊர்வலத்தில் குவிந்த மக்களே சாட்சியாக இருக்கின்றனர்.

1952ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த விஜயராஜ், தனது இளமை காலத்தில் எம்.ஜி.ஆரின் படங்களைப் பார்த்து சினிமாவில் நடித்தே தீர வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொண்டார். சினிமாவைப் பிடிக்கும் என்ற பின்புலத்தை தவிர எதுவும் இல்லாமல் தமிழ் திரையுலகில் நுழைந்தார். இனிக்கும் இளமை படத்தின் மூலம் விஜயராஜாக இருந்த இவரை, விஜயகாந்தாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் எம்.ஏ காஜா.

ஒரே வருடத்தில் 18 படங்கள்: தமிழ் சினிமாவில் 1979ஆம் ஆண்டில் 'இனிக்கும் இளமை', 'தூரத்து இடி முழக்கம்', 'அகல் விளக்கு' என்ற படங்கள் மூலம் களமிறங்கினார், விஜயகாந்த். 1981ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த கால தயாரிப்பாளர்கள் விஜயகாந்தின் கால்ஷீட்டுக்காக குவியத் தொடங்கிய காலமாகவும் அது அமைந்தது.

இவ்வாறு சினிமாவில் கொடி கட்டி பறந்த விஜயகாந்த், 1984ஆம் ஆண்டில் குழந்தை யேசு, சபாஷ், தீர்ப்பு என் கையில், நல்ல நாள், நாளை உனது நாள், நூறாவது நாள், மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், வீட்டுக்கு ஒரு கண்ணகி, வெள்ளைப் புறா ஒன்று, வெற்றி, வேங்கையின் மைந்தன், வைதேகி காத்திருந்தாள், ஜனவரி 1, குடும்பம், சத்தியம் நீயே, மாமன் மச்சான், இது எங்க பூமி என மொத்தம் 18 படங்களில் நடித்தது விஜயகாந்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது.

குறுகிய காலத்தில் பல அற்புதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த விஜயகாந்த், சிறு இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இயக்குநர்கள் வளர வழிசெய்தார். இவரது 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' வெள்ளி விழா கண்டு சாதனை படைத்தது. அன்று முதல் இன்று வரை விஜயகாந்த் அனைவராலும் கேப்டன் விஜயகாந்த் என்றே அழைக்கப்படுகிறார்.

பசியில் இருந்த மக்களுக்கு உணவு, பல இயக்குநர்களை அறிமுகம் செய்தது என இவரது உதவும் குணத்தால் பல மனிதர்களை சம்பாதித்து மட்டுமல்லாமல், பலரின் வாழ்க்கையை உயர்த்தியுள்ளார். காலத்தை வென்ற இவர் மறைந்தாலும், அனைவரது நினைவுகளிலும் உயிர்பித்துக் கொண்டேதான் இருப்பார்.

இதையும் படிங்க: ‘நம்ம படம் எடுப்போம் நண்பா..’ ராவுத்தர் பிலிம்ஸ் கம்பெனி உருவானதன் பின்னணியில் விஜயகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.