ETV Bharat / entertainment

நான் என்ன எழுதினாலும் அதில் அரசியல் வந்துவிடுகிறது - இயக்குநர் ராஜூ முருகன்! - டிரெய்லர் வெளியீட்டு விழா

அமேசான் ப்ரைம் தயாரிப்பில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இயக்கத்தில் உருவான 'மாடர்ன் லவ் சென்னை' என்ற அந்தாலஜி தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

மாடர்ன் லவ் சென்னை என்ற அந்தாலஜி தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா

author img

By

Published : May 11, 2023, 10:22 PM IST

சென்னை: அமேசான் ப்ரைம் தயாரிப்பில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இயக்கத்தில் உருவான 'மாடர்ன் லவ் சென்னை' என்ற அந்தாலஜி தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மேடையில் பேசுகையில், "இது intense ஆன அனுபவமாக இருந்தது. 8 மாதம் எடுக்க வேண்டிய படம், 2 வருடங்கள் ஆனது. இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன். மாடர்ன் லவ் என்பது ஒரு சிலரின் தனிப்பட்ட நபர்களின் கதைகள். இதன் முதல் வெர்சன் முதலில் நியூயார்க்கில் செய்யப்பட்டது.

இந்த மண்ணும் மண்ணை சார்ந்த மக்களும் என நினைக்கும்போது இதற்கு தகுந்த மாதிரி கதையை மாற்றினோம். இளையராஜா, பாரதிராஜா இருவருடனும் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி. யுவனுடன் இரண்டு படம் பண்ணியுள்ளேன். ஆனால் பாடல்கள் பண்ணியதில்லை. அதனால் இப்படத்தில் பணியாற்றினேன். கடைசி நேரத்தில் நானே இயக்க வேண்டியதாக மாறியது. நானே எழுதியதால் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது" என தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய பாரதிராஜா, “குமாரராஜாவுடன் பணியாற்றியது புது அனுபவத்தைக் கொடுத்தது. இதுவொரு மாறுபட்ட படம். குமாரராஜாவிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். இது ஆரவாரம் இல்லாத அழகான ஒரு காதல் கதை. எனக்கு வயது ஆகவே ஆகாது. 9ம் வகுப்பில் ஒரு காதல் இருந்தது.

இதுவரை நான்கு காதல் செய்துள்ளேன். நல்ல நண்பன் கிடைத்துள்ளான். இதுபோன்ற படங்கள் இளையராஜாவுக்கு புதியது. ஆனாலும் சிறப்பாக செய்து நியாயப்படுத்தியுள்ளார். நான் காதல் செய்யவில்லை என்றால் கலைஞன் ஆகிருக்க முடியாது. 84 வயதானாலும் காதல் செய்வேன். காலங்கள் மாறும்போது 4 காதல் செய்துவிட்டேன். எந்த குடையும் நிழல் தருகிறதா என்று தான் பார்க்க வேண்டும். எனக்கு காதல் மிகவும் முக்கியம். தமிழில், இப்படியான ஆட்கள் கிடைப்பது அரிது” என படத்தைப் பற்றி புகழ்ந்து பேசினார்.

அடுத்து பேசிய பாலாஜி சக்திவேல், ”பாலாஜி தரணிதரன் எழுதிய கதையை நான் இயக்கினேன்‌. எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. கதைதான் மிகப்பெரிய பங்கு வகிக்கும். நான் அப்படியே அதை செய்து கொடுத்தேன். அசோக், பானு இருவரும் அறிவார்ந்த நடிகர்கள். இந்த ஆந்தலாஜிக்கு முக்கியக் காரணம் ரைட்டர் தான். இது மிகப்பெரிய அனுபவம். வாய்ப்பு கொடுத்த தியாகராஜன் குமாரராஜாவுக்கு நன்றி” என தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ராஜூ முருகன், ”என்னுடைய 7 வயதில் என் அப்பா முதல்முறை என்னை கடலோர கவிதைகள் படத்துக்கு அழைத்துச் சென்றார். அந்தப் படம் பார்த்தபோது கிடைத்த அனுபவம், என்னை கலைக்கு அழைத்து வந்தது. அப்படிதான் பாரதிராஜா எனக்கு ஸ்பெஷல். எனக்கு மாடர்ன் லவ் என்றால், என்ன என்று தெரியாது. எதை எழுதினாலும் அதில் அரசியல் வந்து விடுகிறது. அந்த மாதிரி கரோனா காலத்தில் குமாரராஜா அழைப்பு விடுத்தார்.

அவர் கூறியதுதான் இது. எல்லாவற்றிற்கும் மாற்று வந்து விட்டது. மனிதனுக்கு மாற்று இல்லாத ஒரு விஷயம் காதல் மட்டும் தான். காமத்தைக் கூட மிஷினால் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால், அன்பைத் தர முடியாது. அன்பு என்ற உணர்ச்சியை மிஷினால் கொடுக்க முடியாது. அம்பேத்கரும் பெரியாரும் தொடர்ந்து கூறிய விஷயம் மனிதம்தான். அதை அன்பால் தான் கொடுக்க முடியும். ஓரினச்சேர்க்கை, வாடகைத்தாய் என அன்பு பரவி உள்ளது.

நான் எது எழுதினாலும் அதில் அரசியல் வந்துவிடுகிறது. இப்போது எல்லா இடத்திலும் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. அது எல்லாம் கொடுக்கிறது, ஆனால் காதல் மட்டும் கொடுக்க முடியாது. நாம் எல்லோருமே பொம்மைகள் தான்” என்றார். இதன் முக்கிய அம்சமாக இந்த அந்தாலஜியில் உள்ள படங்கள் மற்றும் நடிகர்கள் விவரம்,

1. “லாலாகுண்டா பொம்மைகள்” – ராஜுமுருகன் இயக்கியது, இசையமைப்பு ஷான் ரோல்டன் , ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி, மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்.

2 “இமைகள்” – பாலாஜி சக்திவேல் இயக்கியது, இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா, அசோக் செல்வன், மற்றும் டீ.ஜே பானு ஆகியோர் நடித்துள்ளனர் .

3 “காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி” – கிருஷ்ணகுமார் ராம்குமார், இயக்கியது, இசையமைப்பு ஜி.வி.பிரகாஷ் குமார், ரித்து வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

4.“மார்கழி” – அக்ஷய் சுந்தர் இயக்கியது, இசையமைப்பு இளையராஜா , சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங், மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

5.“பறவை கூட்டில் வாழும் மான்கள் ” – பாரதிராஜா இயக்கியது, இசையமைப்பு இளையராஜா, கிஷோர், ரம்யா நம்பீசன், மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

6.“நினைவோ ஒரு பறவை” – தியாகராஜன் குமாரராஜா இயக்கியது, இசையமைப்பு இளையராஜா, வாமிகா மற்றும் பீபி ஆகியோர் நடித்துள்ளனர் எனப் படக்குழுவின் பட்டியலை வெளியிட்டனர்.

இதையும் படிங்க: இராவணகோட்டம் எந்த சமுதாயத்தினரையும் இழிவுபடுத்தவில்லை - தயாரிப்பு தரப்பில் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.