ETV Bharat / entertainment

ரஜினியைத் தொடர்ந்து நெல்சனுக்கு பிரமாண்ட பரிசளித்த கலாநிதி மாறன்! - ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன்

director nelson presented porsche car: 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அப்படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு காசோலையும், விலை உயர்ந்த porsche macan ரக சொகுசு காரையும் கலநிதி மாறன் பரிசாக வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 10:30 PM IST

சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவனம், தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்கின்றது. முதலில் தமிழ் படங்களை விநியோகம் செய்து வந்தது. அதனைத் தொடர்ந்து படங்களை தயாரிக்கவும் தொடங்கியது. தமிழின்‌ முன்னணி நடிகர்களின் பல படங்களை தயாரித்தது.

குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் மூலம் மிகப்பெரிய வசூலை பெற்றது. அதன்பிறகு ரஜினி நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்தது. தற்போது மீண்டும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார்.

இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக நெல்சனின் முந்தைய படத்தை கருத்தில் கொண்டு, அவரை மாற்றுமாறு பல விநியோகஸ்தர்கள் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் நெல்சன் மீது, தான் நம்பிக்கை வைத்திருந்ததாகவும், ரஜினி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.

இந்நிலையில் ஜெயிலர் படம் வெளியாகி, மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் அனைவரின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளார், இயக்குநர் நெல்சன். இதனால் ரஜினி மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனையடுத்து ரஜினிகாந்திற்கு, படத்தின் லாபத்தில் ஒரு பங்கு தொகை மற்றும் விலையுயர்ந்த சொகுசு காரையும் கலாநிதி மாறன் பரிசாக கொடுத்தார். மேலும், படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு ஏதாவது பரிசு வழங்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது இயக்குநர் நெல்சனுக்கும் பரிசுகளை வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

படத்தின் லாபத்தில் இருந்து ஒரு சிறப்புத் தொகையும், விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். பீஸ்ட் படத்தின் சரிவால் நெல்சனை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று ரசிகர்கள் கவலையில் இருந்தனர். ஆனால், ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்து, தான் யார் என்பதை நெல்சன் நிரூபித்துள்ளார்.

முன்னதாக விக்ரம், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் நடிகர்கள், இயக்குநர்களுக்கு விலை உயர்ந்த சொகுசு கார்களை பரிசாக வழங்கி வந்த நிலையில், தற்போது ஜெயிலர் படத்திற்காக ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திரையரங்கை திருவிழாவாக மாற்றிய ரசிகர்கள்.. மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்த மங்காத்தா..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.