சென்னை: ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 25வது திரைப்படம், ஜப்பான். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
-
Here's the official trailers of #Japan. Join our charming "Golden Star" on his thrilling journey and it's time to shine! Get ready for a cinematic Diwali treat 🔥#JapanTrailer
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tamil - https://t.co/bBTfrRNVVY
Telugu - https://t.co/pB2yQwzeBI#Japan #JapanMovie #Karthi25… pic.twitter.com/KnZoxFpmGo
">Here's the official trailers of #Japan. Join our charming "Golden Star" on his thrilling journey and it's time to shine! Get ready for a cinematic Diwali treat 🔥#JapanTrailer
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 28, 2023
Tamil - https://t.co/bBTfrRNVVY
Telugu - https://t.co/pB2yQwzeBI#Japan #JapanMovie #Karthi25… pic.twitter.com/KnZoxFpmGoHere's the official trailers of #Japan. Join our charming "Golden Star" on his thrilling journey and it's time to shine! Get ready for a cinematic Diwali treat 🔥#JapanTrailer
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 28, 2023
Tamil - https://t.co/bBTfrRNVVY
Telugu - https://t.co/pB2yQwzeBI#Japan #JapanMovie #Karthi25… pic.twitter.com/KnZoxFpmGo
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று (அக்.28) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கார்த்தி, இயக்குநர் ராஜூ முருகன், கே.எஸ்.ரவிக்குமார், பா.ரஞ்சித், தமன்னா, லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், சுசீந்திரன், முத்தையா, சிறுத்தை சிவா, சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஜப்பான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.
இதனையடுத்து, இயக்குநர் ராஜூ முருகன் மேடையில் பேசுகையில், ‘இந்த சமூகம் எதை கொடுத்ததோ அதையே திருப்பி கொடுக்கிறேன் என ஜெயகாந்தன் சொல்லியிருப்பார். அதுதான் ஜப்பான் திரைப்படம். பொதுவாக நான் ஒரு கதையை யோசிப்பேன். வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்புவேன். யார் வழியில் கிடைத்தாலும், அவர்களிடம் கதையைச் சொல்லி படம் செய்வேன். இப்பொழுது வரை அப்படித்தான், கார்த்திதான் அதை மாற்றினார்.
என்னைப் பொறுத்தவரை நான் சினிமாவிற்கு வந்ததற்கு ஒரே காரணம், சார்லி சாப்ளின்தான். ஒருவர் பேசாமலே இப்படி படம் செய்ய முடியுமா என ஆச்சரியப்பட்டுள்ளேன். சாதாரணமாக ஒரு படம் இயக்கும்பொழுது, பெரிய கதாநாயகன் வரும்பொழுது இன்னும் படம் பெரியதாக மாறுகிறது.
கார்த்தி புத்தகம் படிக்கிறார், அது முக்கியம் என நினைக்கிறேன். வட்டியும், முதலும் என்ற புத்தகத்தைப் படித்த பின் ஜப்பான் படத்தில் சில காட்சிகளுக்கு இதுபோல மாற்றினால் என்ன என்றார். பருத்திவீரன் படத்திற்கு பிறகு ஜப்பான் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும் என நினைக்கிறேன்.
குறிப்பாக, 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்தால் பார்ட்டி செல்கின்றனர். ஆனால், கார்த்தி வீட்டிற்குச் சென்று 8 மணிக்கு தொலைபேசியில் அழைத்து, அந்த ஷாட் சரியாக வந்துள்ளதா என்பார். நான் திருடன்தான், நீங்கள் எப்படி என கேட்பதுதான் ஜப்பான் திரைப்படம்” என்றார்.
இதையும் படிங்க:Annabhishekam: தஞ்சை தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் 108 கிலோ அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம்!