ETV Bharat / entertainment

லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - LCU

Leo Audio Launch: விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்ன தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 10:47 PM IST

சென்னை: இது தொடர்பாக செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “பாஸ் வேண்டும் என்று அதிகமான பேர் கோரிக்கை வைப்பதாலும் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், லியோ இசை வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்கள் உடன் உங்களோடு தொடர்பில் இருப்போம். மேலும், பலர் நினைப்பதுபோல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என தெரிவித்து உள்ளனர்.

  • Considering overflowing passes requests & safety constraints, we have decided not to conduct the Leo Audio Launch.

    In respect of the fans' wishes, we will keep you engaged with frequent updates.

    P.S. As many would imagine, this is not due to political pressure or any other…

    — Seven Screen Studio (@7screenstudio) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இது தொடர்பாக லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் வெளியிட்டு உள்ள ’X' வலைத்தளப் பதிவில், “இது மிகவும் கடினமான முடிவு. ஒவ்வொரு ரசிகரும் கடந்து செல்லும் அதே அளவிலான ஏமாற்றத்தை நாங்கள் உணர்கிறோம். பல்வேறு விருப்பங்கள் மற்றும் மிகப்பெரிய முயற்சிகள் இருந்தபோதிலும், நாங்கள் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி இருந்தது. டிக்கெட்டின் தேவை மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது” என தெரிவித்து உள்ளார்.

  • It is a very hard decision and We feel the same level of disappointment as each one of the fan will go through. Despite working out various options and tremendous effort, we had to take this tough call, considering the extreme overflow in tickets demand and prioritising the… https://t.co/qqXbYrfciP

    — Jagadish (@Jagadishbliss) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள படம், லியோ. மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இதில் அமைந்து உள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும், இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்து உள்ளது.

அனிருத் இசையமைப்பில் உருவாகி உள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து உள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், இதற்கான புரோமோஷன் பணிகளிலும் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, படத்தின் இசை வெளியீட்டு விழா துபாய், கோவை என நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. இறுதியாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 30ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இருப்பினும், இதில் சில அரசியல் குறுக்கல்கள் இருப்பதாக செய்திகள் பரவின. இந்த நிலையில்தான், இந்த ஒரு அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்குப் பிறகு, ‘குட்டிக்கதை எங்கே?’ என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'Keep Calm and Avoid The Battle' - லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.