ETV Bharat / entertainment

தமிழகத்தில் அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள்! இன்று வெளியாகிய படங்கள் என்னென்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 1:05 PM IST

Re release movies in Chennai: தமிழகத்தில் சமீப காலமாக பிரபல திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று விஸ்வாசம், வட சென்னை, 3 ஆகிய படங்கள் சென்னையில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

இன்று ரீ ரிலீஸ் ஆகும் படங்கள்
இன்று ரீ ரிலீஸ் ஆகும் படங்கள்

சென்னை: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை திரையரங்குகளில் படங்கள் வெளியிடப்படுவது என்பது சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது. காரணம், ரசிகர்கள் அவரவர்கள் ரசிக்கும் நடிகர்களின் படங்களை பிரமாண்டமாக கொண்டாடுவது, ஓடிடி சேவைகளின் வரவுக்குப் பிறகு நேரடியாக திரையரங்குகளில் படங்கள் வெளியாவது சற்று குறைந்தது.

அதேபோல், சில படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் மத்தியில், சரியான வரவேற்பு இல்லாமல் கடந்து போய்விடும்.‌ ஆனால், காலப்போக்கில் அந்த படம் ரசிகர்களிடையே நல்ல கருத்துகளைப் பெறுவதோடு, திரையரங்குகளில் இந்த படத்தைப் பார்க்காமல் தவற விட்டதாக ரசிகர்கள் தங்களது கவலைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வார்கள்.

மேலும், சில படங்கள் எத்தனை முறை திரையரங்குகளில் பார்த்தாலும் சலிக்காது என்றும் ரசிகர்கள் தரப்பில் கருதப்படும். இதைப் போன்ற படங்களை திரையரங்கு உரிமையாளர்கள், அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். அப்படி‌ ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அந்த வகையில், நடிகர்களின்‌ பிறந்தநாள், படத்தின் வருடாந்திரக் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டு படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த வாரம் மூன்று படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. அஜித், நயன்தாரா இணைந்து நடித்த 'விஸ்வாசம்', தனுஷ் நடிப்பில் வெளியான 'வட சென்னை' மற்றும் '3' ஆகிய படங்கள் இன்று சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் இன்று (நவ.17) சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, ஒரு காட்சி திரையிடத் திட்டமிட்டுள்ளதாகத் திரையரங்க நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'வட சென்னை' படத்தின் 5ஆம்‌ ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சமீபத்தில் அப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த வாரமும் அந்தப் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் '3'. இப்படத்தின் மூலம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகினர். குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றிருந்த 'ஒய் திஸ் கொலவெறி' என்கிற பாடல் உலகளவில் பிரபலமானது. இந்த நிலையில், தற்போது '3' படமும் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் ரேஸில் இணையும் விஜய் சேதுபதியின் ஹிந்திப் படம்..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.