ETV Bharat / entertainment

சென்னையில் ஜவான் முன்னோட்ட வெளியீடு தொடங்கியது - ரசிகர்கள் ஆரவாரம்! - ஜவான் திரைப்படம்

Jawan Pre release event: சென்னையில் தனியார் கல்லூரி அரங்கத்தில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

Jawan audio launch
ஜவான் இசை வெளியீட்டு விழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 5:30 PM IST

Updated : Aug 30, 2023, 6:26 PM IST

சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம், ஜவான். இத்திரைப்படத்தை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி, ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சய் தத், யோகி பாபு, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்பத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக, இப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரபல தனியார் கல்லூரி அரங்கத்தில் நடைபெறுகிறது. இதின் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு டிஜே நிகழ்ச்சி நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழா துவங்கியதை தொடர்ந்து, விழா அரங்கத்திற்கு இயக்குநர் அட்லி, படத்தின் இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் ஷாருக்கான், விஜய் சேதுபதி, படத்தொகுப்பாளர் ரூபண், பாடலாசிரியர் விவேக் என திரைப்பிரபலங்கள் பலர் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஜவான் படத்தின் ட்ரெய்லர் திரையிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட அல்லு அர்ஜூன்!

Last Updated : Aug 30, 2023, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.