கோப்ரா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக திரைப்பட குழுவினர்களான நடிகர் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி, மிர்னாலினி மற்றும் மீனாட்சி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்றிருந்தனர். கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய அவர்கள் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதனையடுத்து கோவை கொடிசியா அரங்கம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விக்ரம், இந்த படம் அடிப்படையாகவே அருமையாக செதுக்கப் பட்டிருப்பதாகவும் மாறுபட்ட கதை எனவும் தெரிவித்தார். கதாப்பாத்திரம் சொல்லும் போது அதற்கேற்ப மாறுவது தனக்கு பிடிக்கும் என தெரிவித்த விக்ரம், கோப்ரா திரைப்படம் பல்வேறு சவால்களை கடந்து சிரமப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
3 ஆண்டுக்கு பின் திரையரங்கில் படம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குனர் அஜய்க்கு நன்றி தெரிவித்த விக்ரம், கடைசி வரை திரைப்படத்தில் நடித்து கொண்டே இருப்பேன் என கூறினார். திருச்சி விமான நிலையத்தில் எனது ரசிகர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
சமீபமாக வரும் படங்கள் அதிக அளவில் ஹிட் ஆகிறது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கிரிக்கெட்டை விட சினிமாவில் சிறப்பாக நடித்துள்ளதாகவும் வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகன் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காத விரக்தியில் மன்சூர் அலிகான்