ETV Bharat / entertainment

பாரிஸ் பேஷன் நிகழ்ச்சியில் தங்க ஆடையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்! - ஐஸ்வர்யா ராய் போட்டோ

பாரிஸ் ஃபேஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று ராம்ப் வாக் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Aishwarya Rai
ஐஸ்வர்யா ராய்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 12:16 PM IST

சென்னை: பாரிஸ் ஃபேஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று ராம்ப் வாக் செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது 49 வயது ஆகிறது. இந்த வயதிலும் மாஸ் குறையாமல் தனக்கென ஒரு ரசிகர்களின் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்தார். தொடர்ந்து அவர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உலக அளவில் பிரபலமாக இருக்கும் அழகு பொருட்கள் நிறுவனமான எல் ஓரியல் (L’ Oreal) இன் பிராண்ட் அம்பாசிடராக பல ஆண்டுகளாக ஐஸ்வர்யா ராய் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: 2 வீடுகள், 18 போட்டியாளர்கள்.. கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன்-7.. போட்டியாளர்கள் யார் யார்?

சர்வதேச புகழ் பெற்ற இந்த நிறுவனம், மிக முக்கியமானவர்களை மட்டுமே தங்களது விளம்பர தூதுவராக நியமித்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு நாட்டிலும் மிக பிரபலமாக இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் மட்டுமே தேர்வு செய்வர். இந்த நிலையில், பாரிஸில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய், தங்க நிற உடை அணிந்து ராம்ப் வாக் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல் அமெரிக்க மாடல் கென்டால் ஜென்னர், சீன நடிகர் கோஹ் ஜுன், நடிகை ஆன்டி மெக்டோவல் போன்ற பல்வேறு பிரபலங்கள் ராம்ப் வாக் செய்து அசத்தினர். சமீப காலமாக ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் நிகழ்சிகளில் தனது மகள் ஆராத்யாவுடன் பங்கேற்று வருகிறார். இதனால் வரும் காலங்களில் ஆராத்யாவும் வெள்ளிதிரைக்கு வருவார் என எதிர்ப்பாக்கபடுகிறது.

இதையும் படிங்க: பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.