ETV Bharat / entertainment

துல்கர் - வெங்கி அட்லூரி இணையும் "லக்கி பாஸ்கர்" பூஜையுடன் தொடங்கியது! - சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்

Lucky Baskhar: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்திற்காக படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

துல்கர் - வெங்கி அட்லூரி இணையும் "லக்கி பாஸ்கர்" - பூஜையுடன் ஆரம்பம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 8:08 PM IST

சென்னை: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படப்பிடிப்பு இன்று (செப்.24) பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கிறது. மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தேர்ந்த கதைகள் மூலம் தனக்காக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்தான், துல்கர் சல்மான்.

துல்கர் - வெங்கி அட்லூரி இணையும்
துல்கர் - வெங்கி அட்லூரி இணையும் "லக்கி பாஸ்கர்" - பூஜையுடன் ஆரம்பம்

இவரது படங்கள் பான் இந்தியா அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இவரது ‘சீதா ராமம்’ மற்றும் ‘கிங் ஆஃப் கோதா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, சீதா ராமம் படம் மக்கள் மனதில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது. மேலும், காதல் படமான இது இளைஞர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இதன் மூலம், இந்திய சினிமாவில் வெற்றிகரமான பான் இந்திய நடிகராக துல்கர் சல்மான் உள்ளார். இந்த நிலையில், தற்போது அவர் தெலுங்கில் இயக்குநர் வெங்கி அட்லூரியுடன், 'லக்கி பாஸ்கர்' என்ற தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் 'வாத்தி' படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்த நிலையில், 'லக்கி பாஸ்கர்' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கிய நிலையில், விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், 'ஒரு சாதாரண மனிதனின் அளவிட முடியாத உயரங்களை நோக்கிய அசாதாரண பயணம்' என்ற கருப்பொருளைச் சுற்றி வருவதுதான் 'லக்கி பாஸ்கர்' படத்தின் ஒன்லைன். இந்த படத்திற்கு, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் படத்தொகுப்பை, தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி செய்கிறார்.

இந்நிலையில், படம் குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

இதையும் படிங்க: பரினீதி சோப்ரா - ராகவ் சத்தா திருமணம்! பாரம்பரிய சடங்குகளுடன் கோலாகல கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.