ETV Bharat / entertainment

7 Years of M.S.Dhoni The Untold Story; மறைந்த சுஷாந்த்தை நினைவு கூர்ந்த நடிகை திஷா பதானி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 3:21 PM IST

Updated : Oct 5, 2023, 12:53 PM IST

‘எம்.எஸ் தோனி’ படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் அப்படத்தின் நடிகை திஷா பதானி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து நடித்த காட்சி ஒன்றைப் பகிர்ந்து உணர்ச்சிப்பூர்வமான குறிப்பை எழுதியிருந்தார்.

எம்.எஸ் தோனி படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு: மறைந்த சுஷாந்த்தை நினைவு கூர்ந்த நடிகை திஷா பதானி!

சென்னை: ‘எம்.எஸ் தோனி: தி அண்டோல்ட் ஸ்ரோரி’ என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நடிகை திஷா பதானி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தன் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பு ஒன்றை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

2020ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று மும்பையில் உள்ள அவரது குடியிருப்பில் சுஷாந்த் சிங் மரணமடைந்தார். அவரது இறப்பு திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், திஷாவும் சுஷாந்த்தும் இணைந்து நடித்திருந்த ‘எம்.எஸ் தோனி: தி அண்டோல்ட் ஸ்ரோரி’ திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், திஷா.

படத்தில் உள்ள உணர்ச்சிகரமான காட்சி ஒன்றைப் பகிர்ந்த திஷா, “இந்தி திரையுலகில் எனது இந்த முதல் படத்துக்கும், இந்த அழகான பயணத்துக்கும் நன்றி. உங்களை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், நீங்கள் பேசுவதை கேட்பவர்களையும், முழுமனதாக நேசித்துக் கொண்டாடுங்கள். எங்களால் விடை பெற முடியவில்லை. ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியுடனும் இருக்கிறீர்கள் என நம்புகிறோம்” என எழுதியிருந்தார்.

திஷா அந்த வீடியோவை பகிர்ந்தவுடன், திரைத்துறையில் உள்ள அவரது நண்பர்களும், சக ஊழியர்களும் கமெண்ட் செக்‌ஷனில் குவிந்தனர். வீடியோவுக்கு பதிலளித்த பாலிவுட் நடிகர் அனில் கபூர், "அற்புதமான காட்சி.. இருவரும் மிகவும் நன்றாக இருக்கிறீர்கள்.. ” என படத்தில் திஷாவின் நடிப்பை பாராட்டினார்.

இதையும் படிங்க: Leo Movie: பதானை மிஞ்சிய லியோ.. வெளிநாடுகளில் தெறிக்கவிடும் டிக்கெட் விற்பனை.! வரலாற்று சாதனை!

அவரது நெருங்கிய தோழியான மௌனி கருத்து தெரிவிக்கையில், "இந்த படத்தில் நீ அன்பின் உருவகமாக இருந்தாய்.. மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தாய்.. உன்னை நேசித்தேன்.. எப்போதும் உனக்காக உற்சாகப்படுத்துவேன்..” என கூறியிருந்தார்.

நீரஜ் பாண்டே இயக்கிய ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’, நம் நாட்டின் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு. மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், திஷா பதானி மற்றும் கியாரா அத்வானியுடன் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார்.

2016-இல் வெளியான இந்த திரைப்படத்தில் திஷா பக்கத்து வீட்டு பெண்போல் எதார்த்தமாக நடித்திருந்ததையும், சுஷாந்த் உடனான அவரது கெமிஸ்ட்ரியையும் பலரும் பாராட்டினர். இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படம் சுஷாந்த்துக்கு வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. மேலும், திரைப்படத்தில் அவரது பணிக்காக, வருடாந்திர விருது நிகழ்ச்சிகளில் சிறந்த நடிகருக்கான பல பரிந்துரைகளையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் போராடும் நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படுமா? - தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் பதில்!

Last Updated : Oct 5, 2023, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.