ETV Bharat / entertainment

Ileana D'Cruz : காதலனுக்கு முன் கர்ப்பத்தை அறிவித்த இலியானா! அதிர்ச்சியில் ரசிகர்கள்! - நண்பன் பட நடிகை கர்ப்பம்

தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை இலியானா அறிவித்து உள்ளார். காதலனை அறிவிக்கும் முன்னரே இலியானா கர்ப்பத்தை அறிவித்தது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Ileana D Cruz
Ileana D Cruz
author img

By

Published : Apr 18, 2023, 11:15 AM IST

மும்பை : நடிகை இலியானா டி க்ருஸ் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் அறிவித்து உள்ளார். கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை இலியானா. கேடி படம் நடிகை இலியானாவுக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுத் தராத போதிலும் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தியது.

நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை இலியானா நடித்து இருந்தார். தனது தனிப்பட்ட விஷயங்களை வெளியே கசிய விடாமல் பார்த்துக் கொள்வதில் கனக்கச்சிதமாக இயங்கி வரும் நடிகை இலியானா தற்போது தன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவலை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் பதிவிட்டு உள்ளார். சிறு குழந்தைகள் அணியும் உடையின் புகைப்படத்தை வெளியிட்ட அவர் அதில் "விரைவில் வா, உன்னை சந்திக்க காத்திருக்க முடியாது எனது சிறிய டார்லிங் என இலியான பதிவிட்டு உள்ளார். நடிகை இலியானா வெளியிட்ட புகைப்படத்தில் "அதனால் சாகசம் தொடங்குகிறது" என அச்சிடப்பட்டு உள்ளது.

அதேபோல் "அம்மா" என பொறிக்கப்பட்டு இருந்த செயினை அணிந்து இருக்கும் மற்றொரு புகைப்படத்தையும் நடிகை இலியானா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இலியானாவின் கொடுத்த இன்ப அதிர்ச்சியை கண்டு உறைந்து போன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம் தனது காதலன் குறித்த அறிவிப்பை இலியானா இது வரை வெளியிடாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காதலனை அறிவிக்கும் முன்னரே இலியானா கர்ப்பத்தை அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ரகசியம் காக்கும் இலியான, நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டின் லாரென்ட் மிக்கெலுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

கத்ரீனா கைஃப் - விக்கி கவுசல் இணையின் மாலத்தீவு சுற்றுப்பயணத்தில் இலியானா மற்றும் செபாஸ்டினை கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியானதை அடுத்து இருவர் குறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டது. இருப்பினும் இருவரது தரப்பில் இருந்தும் இதுவரை எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன் புகைப்பட தொழில்நுட்பக் கலைஞர் அண்ட்ரூ நீபோன் என்பவருடன் இலியானா தொடர்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நடிகர் அபிஷேக் பச்சனுடன் தி பிக் புல் படத்தில் நடித்த இலியானா, தற்போது ரன்தீப் ஹூடாவுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மணல் கடத்தலை தடுத்த பெண் அதிகாரி மீது கொலை வெறி தாக்குதல் - 44 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.