பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கட் பிரபு யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘மாநாடு’. தற்போது வெங்கட் பிரபு அடுத்த இயக்கவிருக்கும் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இளையராஜாவும் சேர்ந்து இசையமைக்க உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் முதன்முதலில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இசையமைத்த மாமனிதன் திரைப்படம் நாளை (ஜூன் 24) வெளியாகிறது.
இதையும் படிங்க: பாடகர் திருமூர்த்தியை அழைத்து வாழ்த்திய கமல்ஹாசன்!