கோழிக்கோடு: வளர்ந்து வரும் நடிகையும், மாடலுமாக இருந்தவர் ஷஹானா(20). இவர் அவரது வீட்டில் நேற்று இரவு(11:30) சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து காணப்பட்டார்.
அதாவது, அவரது வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இவரது மரணத்திற்கு இவரது கணவன் ஷஜ்ஜத் தான் காரணம் என ஷஹானாவின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், ஷஹானாவின் மரணம் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்ததன்பேரில் காவல் துறையினர் ஷஜ்ஜத்தை விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஷஹானாவின் உடல் உடற்கூராய்விற்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநர் படத்திற்கு இசை அமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!