நடிகர் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய சினிமா உலகில் புதிய சாதனைப் படைத்துள்ளது.
தென்கொரியாவில் உள்ள சியோலியிலும் இப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் இந்தியில் அமீர் கான் நடிப்பில் வெளியான 'டாங்கல்' படத்தையும் முறியடித்து சாதனைப் படைத்துள்ளது.
தென்கொரியாவில் சியோலியில் இந்தி மொழியில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் புகைப்படங்கள் ட்விட்டரிலும் வைரலாகி வருகின்றன. இத்திரைப்படம் உலகமெங்கிலும் தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14ஆம் தேதியில் வெளியானது.
இத்திரைப்படம் ஏற்கெனவே நேபாளம், வங்காளம், மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் வசூலித்த ரூ.1,127.65-ஐ விட, கேஜிஎஃப் 2 படம் ரூ.1,129.38 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
இதையும் படிங்க: 'சாய் பல்லவிக்கு பிறந்தநாள் பரிசளித்த கமல்..!'