ETV Bharat / entertainment

விவேக்கின் ஆசையை நிறைவேற்றுமா 'இந்தியன் 2' படக்குழு? - kamal haasan

இந்தியன் 2 படத்தில் மறைந்த நடிகர் விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படமாட்டாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 1, 2023, 7:45 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என்ற பெயரோடு விளங்கியவர், நடிகர்‌‌ விவேக். இவரது நகைச்சுவை காட்சிகள் சமூக சிந்தனை‌யுடன் இருக்கும். இவர் தமிழ்த் திரையுலகில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் நடிகர் விவேக்கிற்கு கமல்ஹாசன் உடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்து வந்தது.

கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என விவேக் பல மேடைகளிலும், பேட்டிகளிலும் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். அவரின் ஆசை ’இந்தியன் 2’ படம் மூலம் நிறைவேறியது. இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்தார், விவேக். ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கிரேன் விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர்.

அதன்பின் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்குள் நடிகர் விவேக் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மரணமடைந்துவிட்டார்.

விவேக் இறந்துவிட்டதால் இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிடும் என்ற தகவல் வெளியானது. அவருக்குப் பதில் வேறு நடிகரை நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இதனால் கமல் படத்தில் இடம்பெற வேண்டும் என்கிற நடிகர் விவேக்கின் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற சோகத்தில் ரசிகர்கள் இருந்து வந்தனர்.

நடிகர் விவேக் கடைசியாக சரவணன் அண்ணாச்சி நடித்த ’லெஜண்ட்’ படத்தில் நடித்திருந்தார். இதனால் அதுதான் விவேக்கின் கடைசி படம் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டனர். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக் நடித்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கும் முடிவை கைவிட்டுள்ளதாகவும், அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு விவேக் நடித்த காட்சிகள் இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றால் அவருக்கு டப்பிங் யார் பேசப் போகிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற நடிகர் விவேக்கின் ஆசை நிறைவேற வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இதையும் படிங்க: "நல்ல நண்பர்களை இழந்து விடாதீர்கள்; எனக்கு நண்பர்களே கிடையாது"- செல்வராகவன் வருத்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.