ETV Bharat / entertainment

தாடி பாலாஜி பெயர் எதுக்கு! நானும் ஃபேமஸ் தான் - நித்யா பேச்சு - நித்யா பேச்சு

கேட்ட லஞ்சத்தை அளிக்காதாதால், தன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிந்துள்ளதாக நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் தாடி பாலாஜியின் மனைவி என்று தன்னை குறிப்பிட வேண்டாம் என்றும்; தானும் ஃபேமஸ் தான் என்றும் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 30, 2023, 9:17 PM IST

தாடி பாலாஜி பெயர் எதுக்கு! நானும் ஃபேமஸ் தான் - நித்யா பேச்சு

சென்னை: லஞ்சம் கேட்டு கொடுக்காததால் போலீசார் தன்னை கைது செய்ததாக தாடி பாலாஜியின் மனைவி நித்யா இன்று (ஜன.30) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கீ செயினை தேடி எடுத்த சிசிடிவி காட்சியை வைத்து, தான் காரை சேதப்படுத்திவிட்டதாக போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாஜகவில் இணைந்து பெண்கள் மேம்பாட்டிற்காக செயல்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் சாஸ்திரி நகர் தெருவில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவுக்கும், வீட்டருகே வசித்து வரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி என்பவருக்கும் இடையே சில நாட்களாகப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மணியின் காரை, நித்யா கற்களால் சேதப்படுத்தியதாக சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் நித்யா மாதவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் புனையப்பட்ட சிசிடிவி காட்சியை வெளியிட்டு தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்துவிட்டதாக கூறி, நடிகர் தாடி பாலாஜியின் மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை இன்று அளித்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய நித்யா, ’கடந்த ஒரு வாரமாக எதிர் வீட்டுக்காரரான மணி என்பவருடன் கார் பார்க்கிங் பிரச்னை நிலவி வந்ததது. இதனால் தொடர்ந்து தன்னையும், தனது குழந்தையினையும் இழிவான வார்த்தைகளால் மணி குடும்பத்தினர் திட்டி வந்தனர். மணியின் காரை தான் கற்களால் சேதப்படுத்தியதாக வந்த சிசிடிவி காட்சிகள் புனையப்பட்டவை. துணிவு படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் செல்லும் போது, அங்கு கீ செயின் கீழே விழுந்ததால் அதை தேடினேன்’ என அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், 'புனையப்பட்ட சிசிடிவி காட்சியை காண்பித்து மணி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் அதிகப்படியான பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். தர மறுத்ததால் தனது பெயரை களங்கப்படுத்த அவர்கள் காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்துள்ளனர். தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்குகளில் காவல் துறைக்கு எதிராக செயல்பட்டேன். அப்போது போலீசாருக்கு லஞ்சம் கொடுக்காததால் காவல் துறையினர் பழிவாங்குகிறார்கள்’ எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தன் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டதால் அதிகாலையிலேயே மது விற்பனை நடைபெறுவதாகவும், காவல்துறை லஞ்சம் பெற்று அனுமதிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். கடைசி வரை பக்கத்து வீட்டுக்காரருடன் என்ன பிரச்னை என்பதை தெளிவாக தெரிவிக்காமல் பெண்கள் மேம்பாடு, பெண் தலைவர்களான ஜெயலலிதா, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர்களை பற்றி பேசி நித்யா பாஜகவில் சேரப் போவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐ.பி.எஸ் அதிகாரியாக ஒன்பது வருடம் இருந்து கொண்டு அண்ணாமலை மக்களிடையே சீர்திருத்தம் செய்ய முடியாததால், பாஜகவின் தலைவராக மாறியுள்ளார். அதேபோல பெண்கள் மேம்பாட்டிற்காக பாஜகவில் சேரப்போவதாக தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறினார்.

பெண்கள் மேம்பாட்டிற்காக பாஜகவில் சேரப்போவதாக கூறிய நித்யாவிடம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அடிப்படையில் ஆபாசமாக அவதூறாக பேசும் பாஜகவினர் மீதும் பாஜக தலைவர் அண்ணாமலை மீதும், நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, பதில் அளிக்க முடியாமல் திணறினார். இவ்வாறாக பக்கத்து வீட்டு பிரச்னைக்கு புகார் அளிக்க வந்த தாடி பாலாஜி மனைவி நித்யா பாஜகவில் சேரப்போவதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவர் செய்தி வெளியிடுகையில், தாடி பாலாஜியின் மனைவி என்று தன்னை குறிப்பிட வேண்டாம் என்றும்; தானும் ஃபேமஸ் தான் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகர் தாடி பாலாஜி மனைவி மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.