சிவகார்த்திகேயனின் அடுத்த படமான 'பிரின்ஸ்' எனும் படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மற்றும் மாடலான ’மரியா ரியாபொஷப்கா’ சிவகார்த்திகேயனிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் உக்ரைன் நாட்டில் கீவ் நகரத்தைச் சேர்ந்தவர்.
இவர் ஏற்கெனவே 2021இல் ஹாட்ஸ்டாரில் வெளியான வெப்தொடரான ‘ஸ்பெஷல் ஓபிஎஸ்:1.5’ எனும் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், அதற்கு முன்பே போலாந்தைச் சேர்ந்த இயக்குநர் ‘கிரிஷிஸ்தோஃப் சனுஸ்ஸி’ இயக்கத்தில் வெளியான ’எத்தர்’(Ether) எனும் படத்தில் நடித்துள்ளார்.
இதனையடுத்து சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தில் இணைந்தார், மரியா. இந்தப்படத்தின் கதாநாயகி வெளிநாட்டைச் சார்ந்தவராக இருக்க வேண்டுமென இப்படக்குழுவினர் வெகுநாட்களாகத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், மிகுந்த தேடலுக்குப் பின்னர், ‘மரியா ரியாபொஷப்கா’ இந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாய்ப் பொருந்தியதும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர், படக்குழுவினர்.
இந்தப் படத்தில் ஒரு டூரிஸ்ட் கைடு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரேம்ஜி வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மரியாவுக்கு திருக்குறள் கற்று கொடுக்கும் பிரின்ஸ்