ETV Bharat / entertainment

ஒரே நாளில் வாழ்க்கையை புரட்டி போட்ட சண்டை காட்சி.. யார் இந்த நடிகர் பாபு?

Who is Actor Babu: முதுகுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு 30 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் என் உயிர் தோழன் பாபு இன்று உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 7:52 PM IST

சென்னை: திரைப்பட சண்டைக் காட்சியின்போது முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த ‘என் உயிர் தோழன்’ திரைப்பட நடிகர் பாபு இன்று உயிரிழந்தார். கரோனா காலத்தில் தொடங்கி தற்போது வரை திரையுலகில் மனோபாலா, மயில்சாமி, ஆர்.எஸ்.சிவாஜி, மாரிமுத்து என பல கலைஞர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

  • திரைத்துறையில்
    மிகப்பெரும் நட்சத்திரமாக
    வந்திருக்கவேண்டியவன்
    படப்பிடிப்பில் நடந்த விபத்தில்
    30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன்
    வாழ்ந்து மறைந்த
    " என் உயிர் தோழன் பாபு " வின்
    மறைவு மிகுந்த மனவேதனை
    அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/ANwRUthJbd

    — Bharathiraja (@offBharathiraja) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இன்று 1990களில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாபு உயிரிழந்தார். சினிமா கனவுகளுடன் சென்னை வந்த பாபு, பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். பின்னர் 1990இல் பாரதிராஜா, தான் இயக்கிய ‘என் உயிர் தோழன்’ படத்தில் பாபுவை ஹீரோவாக்கி அழகு பார்த்தார். அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் இளையராஜா இசையில் “குயிலும் குப்பம் கோபுரம் ஆனதென்ன” என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

அந்த படம் முதல், பாபு ’என் உயிர் தோழன் பாபு’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். பாபு அடுத்தடுத்து பல கிராமத்து கதைகளில் கமிட்டானார். பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு ஆகிய படங்கள் நடித்து வெளியானது. கோலிவுட்டில் முண்ணனி நடிகராக முன்னேறி வந்த என் உயிர் தோழன் பாபு, ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

அந்த படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஹீரோ மாடியிலிருந்து குதிக்க வேண்டும், அதற்கு டூப் தேவையில்லை, காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என பாபு, தானே குதிப்பதாக இயக்குநரிடம் கூறியுள்ளார். ஆபத்தை அறிந்த இயக்குநர், மறுத்து டூப் வைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இருப்பினும், விடாப்பிடியாக பாபுவே அந்த காட்சியில் மாடியிலிருந்து குதித்துள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காதபோது, அவரது முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பாபுவின் வாழ்க்கையையே புரட்டி போட்டது. பல சிகிச்சை மேற்கொண்டும் பாபுவால் இன்று வரை எழுந்து உட்கார கூட முடியாத நிலை ஏற்பட்டது. கடைசி வரை அவரது தாயார்தான் அவரை கவனித்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பாபுவின் உடல்நிலை மோசமடைய, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்துக்கு ’கோல்டன் டிக்கெட்’ வழங்கிய பிசிசிஐ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.