ETV Bharat / entertainment

' திரைக்கதை எழுதுபவர்களுக்கு ஏற்றது ஓடிடி தான்...' - வெற்றிமாறன் - இயக்குநர் அமீர்

திரைப்படங்களை விட இணையத்தொடர்கள் தான் திரைக்கதை எழுதுபவர்களுக்கு மிகவும் ஏற்றது என்று ஜீ 5 ஓடிடி நிறுவனத்தின் இணையத்தொடர்களின் அறிமுக விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

’எழுத்தாளர்களுக்கு ஏற்றது ஓடிடி தான்..!’- வெற்றிமாறன்!

author img

By

Published : Apr 6, 2022, 6:31 PM IST

சென்னை: ஜீ 5 நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள புதிய இணையத்தொடர்களின் பெயர் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கிருத்திகா உதயநிதி , நடிகர் பிரகாஷ்ராஜ் , நடிகை ராதிகா , நடிகர் விமல், நடிகர் கலையரசன் , இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், வசந்தபாலன், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்வேறு இணையத்தொடர்களின் அறிமுகம்: ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ’நிலமெல்லாம் ரத்தம்’, ’அனந்தம்’ , ’Fingertip season 2’ , ’கொலைகாரனின் கைரேகைகள்’ , ’அயலி’ , ’ஐந்தாம் வேதம்’ , ’கார்மேகம்’ , ’தலைமைச் செயலகம்’ , ’பேப்பர் ராக்கெட்’ , ’Five six seven eight’ ஆகிய இணையத்தொடர்களின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டு, தொடரில் நடித்தவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் Zee 5 தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப்பெற்ற படங்கள் மற்றும் இணையத்தொடர்களில் நடித்தவர்கள் மேடையில் கவுரவிக்கப்பட்டனர்.

'பேப்பர் ராக்கெட் ' இணையத்தொடரின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி பேசும்போது, தனது அப்பா, அம்மாவின் வாழ்க்கையிலிருந்து பேப்பர் ராக்கெட் தொடரின் கதையை உருவாக்கியதாகக் கூறினார். கார்மேகம் இணையத்தொடர் மூலம் முதன்முறையாக , இணையத்தொடரில் நடித்துள்ளதாக நடிகை ராதிகா தெரிவித்தார்.

’நானும் வெற்றி மாறனும் ரத்தமும் சதையுமாக இருப்போம்..!’: மேலும், வெற்றி மாறன் கதையில் , அமீர் நடிப்பில் , யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள 'நிலமெல்லாம் ரத்தம்' இணையத்தொடர் குறித்து மேடையில் பேசிய வெற்றிமாறன், ”திரைப்படங்களைக்காட்டிலும் , திரைக்கதை எழுதுபவர்களுக்கு ஏற்றது இணையத்தொடர்கள்தான். திரைப்படங்களில் 200 முதல் 250 பக்கம்தான் கதை எழுத முடியும்.

ஆனால், இணையத்தொடர்களுக்கு நிறையவே எழுதலாம். திரையரங்கு வெளியீட்டை மனதில் வைத்தே படங்களை எடுத்து வருகிறோம். ஆனால் திரைப்படங்களுக்கான limitation-ஐ கடந்து பேசுவதற்கு இணையத்தொடர்கள்தான் உதவியாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் பேசுகையில், “இரண்டரை ஆண்டுக்கும் மேலான முயற்சி இது. நானும் வெற்றிமாறனும் கதையில் ரத்தமும் சதையுமாகவே வருவோம். எங்களது கதைகளில் நடனம், வண்ணமயமான காட்சிகள் எல்லாம் இருப்பதில்லை. வெற்றிமாறன்கூட சேர்ந்து படம் நடித்துள்ளது புதிது. திரைப்படங்களைக் காட்டிலும் இணையத்தொடர் மூலம் பலவற்றை சொல்லிவிட முடியும்” என்றார்.

இதையும் படிங்க:இஸ்லாமிய நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.