சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பல மொழி கதைகளின் சாம்ராஜ்யமான ZEE 5, சமீபத்தில் தமிழ் ஒரிஜினல் சிரீஸ் 5678 என்ற தொடரின் டிரெய்லரை வெளியிட்டது. தொடரின் அறிவிப்புக்கு சிறந்த வரவேற்பும் கிடைத்துள்ளது, நடனத்தின் அடையாளமாக இருக்கும் சாய் பல்லவி 5678 தொடரின் தன்னம்பிக்கையூட்டும் அற்புதமான டிரெய்லரை வெளியிட்டார்.
ஏ.எல்.விஜய், பிரசன்னா ஜே.கே. மற்றும் மிருதுளா ஸ்ரீதரன் போன்ற திறமையான இயக்குநர்களின் தலைமையில், ஆற்றல் மிக்க இளம் நடனக்கலைஞர்கள், தங்கள் நடனத்தின் மூலம் அனைவரையும் பெருமைப்படுத்த உள்ளனர். இந்தத் தொடர் 18 நவம்பர் 2022 அன்று ZEE5இல் தமிழில் ஒளிபரப்பப்படும்.
ஏ.எல்.அழகப்பன் ஹிதேஷ் தாக்கூர் தயாரித்த இந்தத் தொடர் இளம் மற்றும் திறமையான இளைஞர்களின் பயணத்தை எடுத்துக்காட்டவுள்ளது. சமூகத்தின் அடித்தட்டிலிருந்து முன்னேறி வரும் வரும் நபர்கள் நடனத்தை விரும்புகிறார்கள், ப்ரொஃபெஷ்னல் பயிற்சி பெறாத திறமைசாலிகள்.
கேட்டட் கம்யூனிட்டியில் இருக்கும் குழந்தைகள் தங்கள் திறமைகளை மேம்படுத்துவதைப் பார்த்து, இந்த இளம் கலைஞர்கள் தங்கள் கனவுகளைத் துரத்தவும், எதிர்ப்புகளை எதிர்த்து போராடவும் முடிவு செய்கிறார்கள். கேட்டட் கம்யூனிட்டியைச் சேர்ந்த கேசவ் அவர்களுடன் இணைந்தவுடன் அவர்களின் கனவுகள் சிறகுகளைப் பெற்று முன்னேறும் விறுவிறுப்பான தொடர்.
இயக்குனர் விஜய் பேசுகையில், “இந்தத் ப்ராஜெக்ட் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது, சில அற்புதமான நபர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பிரசன்னா ஜே.கே மற்றும் மிருதுலா ஸ்ரீதரன் ஆகியோருடன் எண்ணங்களின் சிறந்த பரிமாற்றம் மறக்க முடியாதது. மேலும் 5678 படைப்பாற்றலின் ஓர் ஒருங்கிணைந்த தயாரிப்பாகும். தென்னிந்தியாவில் நடனத்தை கருப்பொருளாகக் கொண்ட படங்கள்/நிகழ்ச்சிகள் அதிகமாக வெளிவரவில்லை.
அதனடிப்படையில், உதித்த புதிய யோசனைதான் இந்த முயற்சி. 5678 இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்வதோடு அவர்களின் இதயத்தில் நீங்காத இடம்பெறும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: டிரைவர் ஜமுனா ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!