-
Well apart from the race, one real bonus at the #HyderabadEPrix was getting lessons from @AlwaysRamCharan on the basic #NaatuNaatu steps. Thank you and good luck at the Oscars, my friend! pic.twitter.com/YUWTcCvCdw
— anand mahindra (@anandmahindra) February 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Well apart from the race, one real bonus at the #HyderabadEPrix was getting lessons from @AlwaysRamCharan on the basic #NaatuNaatu steps. Thank you and good luck at the Oscars, my friend! pic.twitter.com/YUWTcCvCdw
— anand mahindra (@anandmahindra) February 11, 2023Well apart from the race, one real bonus at the #HyderabadEPrix was getting lessons from @AlwaysRamCharan on the basic #NaatuNaatu steps. Thank you and good luck at the Oscars, my friend! pic.twitter.com/YUWTcCvCdw
— anand mahindra (@anandmahindra) February 11, 2023
ஹைதராபாத்: ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் RRR. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு... நாட்டு.. பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. குறிப்பாக ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் வேகமாக ஸ்டெப் போடும் நடனம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை பலரும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர்.கீரவாணி இசையமைப்பில் உருவான இப்பாடலுக்கு அண்மையில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பார்முலா இ-ரேஸ் பந்தயத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ராம் சரண், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, நடிகர் ராம் சரண், ஆனந்த் மகிந்திராவுக்கு நாட்டு.. நாட்டு.. பாடலுக்கான ஸ்டெப்பை கற்றுக் கொடுத்தார். இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஆனந்த் மகிந்திரா, "ஹைதராபாத் இ-பிரிக்ஸ் பந்தயத்தை தவிர எனக்கு கிடைத்த உண்மையான போனஸ் எதுவெனில், நாட்டு..நாட்டு.. பாடலுக்கு எப்படி ஸ்டெப் போடுவது என்பது குறித்து ராம்சரணிடம் கற்றுக் கொண்டேன். ஆஸ்கர் விருது பெற வாழ்த்துக்கள் நண்பரே" என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள ராம் சரண், "என்னை விட வேகமாக ஸ்டெப் போடுகிறீர்கள். அந்த தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி" என கூறியுள்ளார்.