ETV Bharat / entertainment

நடிகை துனிஷா சர்மா கர்ப்பமாக இருந்தாரா? பிரேத பரிசோதனை முடிவு - மும்பை நடிகை தற்கொலை

நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

நடிகை  துனிஷா சர்மா
நடிகை துனிஷா சர்மா
author img

By

Published : Dec 26, 2022, 9:47 AM IST

மும்பை: நடிகை துனிஷா சர்மாவின் தற்கொலை மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவரது மர்மமான மரணம் பல்வேறு வதந்திகளை கிளப்பியது. காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம், கர்ப்பமாக இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்று பல்வேறு யூகங்களை கிளம்பிவிட்டன.

இந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கர்ப்பமாக இல்லை என்றும், தூக்கில் தொங்கியதன் காரணமாத மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில், இந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா(20) டிசம்பர் 24ஆம் தேதி மரணமடைந்தார்.

அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற சீரியலில் துனிஷா சர்மா நாயகியாக நடித்து வந்த நிலையில், அந்த படப்பிடிப்பு தளத்தில் மேக்அப் அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அவரது சக நடிகரும் முன்னாள் காதலனுமான ஷீசன் முகமது கானை போலீசார் கைது செய்தனர்.

ஷீசன் முகமது கானும், துனிஷா ஷர்மாவும் காதலித்து வந்ததாகவும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. காதல் தோல்வியால் துனிஷா ஷர்மா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தற்கொலை செய்திருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே அவர் கர்ப்பமாக இருந்ததாக வதந்திகள் கிளம்பின. ஆனால் போலீசார் மறுப்பு தெரிவித்து, உடற்கூராய்வு முடிவிலேயே உண்மை தெரியவரும் என்று தெரிவித்தனர். அதன்பின், இன்று (டிசம்பர் 26) உடற்கூராய்வு முடிவுகள் வெளியாகின. அதில், அவர் கர்ப்பமாக இல்லை என்றும், தூக்கில் தொங்கியதன் காரணமாத மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இளைஞரின் உடலில் பெண் இனப்பெருக்க உறுப்புகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.