படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண், சந்திரன், மஹாலக்ஷ்மி ஷங்கர், குவின்சி, வலினா பிரான்சிஸ், நிம்மி இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தை பற்றி பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரன், ஒரு நாள் இரவில் நடக்கும் முழு நீள திரில்லர் படமாக 'விடியும் வரை காத்திரு' இருக்கும் என்றும், தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றும் கூறினார்.
ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு நக்சலைட் கார் மாறி செல்கின்றனர். இந்த பயணத்தின் போது ஏற்படும் விளைவுகள் தான் இந்த படத்தின் மையக்கரு. இதில் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார், விக்ராந்த் நக்சலைட் ஆக வருகிறார், மற்றும் விதார்த் முக்கியமான டிரைவர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்; ஒரு சுவாரசியமான நேரத்தில் இந்த பயணத்தில் இணைகிறார் வருண்," என்று ரவீந்திரன் தெரிவித்தார்.
விதார்த், விக்ராந்த் மற்றும் கார்த்திக் மூவருமே மிகவும் நேர்த்தியான கலைஞர்கள். சரியான கதையை தேர்வு செய்வதில் விதார்த் திறமைசாலி, விக்ராந்த் ஒரு சிறந்த நடிகர். நடிப்பில் இருந்து விலகி இருந்த கார்த்திக்கை நான் சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தேன்.
இந்த திறமைசாலிகளுக்கு இப்படம் உரிய அங்கீகாரத்தை அளிக்கும் என்று தனக்கு நம்பிக்கை உள்ளது எனவும் நியூசிலாந்து நாட்டில் இருந்து நடிப்பதற்கு ஆர்வத்துடன் வருண் வந்துள்ளார் என்றும் ரவீந்திரன் தெரிவித்தார்.
படத்தின் தலைப்பை பற்றி பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரன், "பல வருடங்களுக்கு முன்பு பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'விடியும் வரை காத்திரு'. இதன் தலைப்பு எங்கள் படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் அவரிடம் சென்று கோரிக்கை வைத்தோம். முழு மனதோடு இந்த தலைப்பை அவர் எங்களுக்கு வழங்கினார்," என்றார்.
ஜூலை 23 அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பு முழுவதும் கோயம்புத்தூரில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: இடுப்பழகி இலியானாவின் அழகிய புகைப்பட தொகுப்பு